Video Transcription
ரயில் மைலாடுதுரை ஸ்டேஷனை தாண்டிச் சென்று கொண்டிருந்தது.
இன்னும் ஒரு மணி நேரம் தான் நம்ம ஊரு ஸ்டேஷன் வந்துடும் என்று அருணிடம் கூறினார் அவனது அப்பாகுமார்.
மூன்று வருடம் கழித்துச் சொந்த ஊருக்கு வரும் ஆனந்தம் அவருக்கு.
ஆனால் அருணுக்கும் மும்பை சிட்டியில் நன்றாக செட்டில் ஆகிவிட்டு கிராமத்திற்கு வருவதில் விருப்பம் இல்லை.
மகனின் மனதைப் புரிந்து கொண்ட குமார்.